நடிகை சார்மியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று – டுவிட்டரில் உருக்கம்!

Charmy Kaur at Jyothi Lakshmi Trailer Launch - Photos,Images,Gallery - 13558

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சார்மி தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் இப்போது பலத்த மழை காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சார்மியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சார்மி இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த போது டுவிட்டரில் ‘‘கொரோனா இந்தியாவில் பரவி விட்டது…. வாழ்த்துகள்’ எனத் தெரிவித்து கண்டனங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.