நடிகைகளுக்கு எதிரான போதைப்பொருள் வழக்கு… நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் !

நேரலையால் உருவான சர்ச்சை: இதயமற்றவள் போல சித்தரிக்காதீர்கள் - சஞ்சனா கல்ரானி  காட்டம் | sanjana galrani statement about live issue - hindutamil.in

கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் சிறையில் உள்ள நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகை ராகினி திவேதி வீட்டில் திடீரென போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை தொடர்ந்து ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சஞ்சனா கல்ராணி கைது செய்யட்டு இருவரும் பெங்களூர் அக்ரஹார
சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் போதைப்பொருள் வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை உடனடியாக ஜாமீனில் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி பெங்களூரி ஏற்பட்ட கலவரத்தில் கைதாகியவர்களையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இல்லையெனில் காரை வெடி வைப்போம் என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து நீதிபதி சீனப்பா பெங்களூர் போலிஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடிகை ராகினி திவேதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது