நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது – செ.கு. தமிழரசன்

நடிகர் ரஜினி தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்திய பிறகும் இன்னும் கட்சி தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவரது இல்லத்தின் முன் கடந்த வாரம் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென பாராட்டினார்கள்.

இந்நிலையில், ரஜினியின் அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த அறிக்கையில் அவரது அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: எனது நண்பர் ரஜினி தனது உடல்நிலை குறித்து அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அவருக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது எனவே அவர் வரும் ஆண்டில் ஜனவரி பெப்ரவரியில் கூட கட்சி தொடங்க வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.