நடிகர் சூரி காவல்துறையினர்களிடம் புகார்.

Soori blasts critics for slamming his comedy in Seema Raja and Saamy Square  - Movies News

நடிகர் சூரி தன்னிடம் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்ததாக இருவர் மீது காவல்துறையினர்களிடம் புகார் அளித்திருந்தார் என்பதும், இதில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சற்று முன்னர் நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நில மோசடி தொடர்பாக புகார் அளித்த நடிகர் சூரியை அக்டோபர் 29ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி நடந்தது என்றால் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்று விடும் என்பதும் அந்த வகையில் சூரியிடம் மோசடி செய்த தொகை 2.7 கோடி என்பதால் இந்த வழக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்று உள்ளது என்பதும் அதனால் தான் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சூரிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.