நடிகராகும் விக்னேஷ் சிவன்: நயன்தாராவுக்கு ஜோடியா?

Nayanthara And Vignesh Shivan To Enter The Wedlock Soon, Nayanthara Vignesh  Shivan Marriage Date - Filmibeat

சூர்யா நடித்த ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளார்கள் என்பதும் தெரிந்தது.

மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் ஆனால் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரில் யார் நடிப்பது? என்பது கேள்விக்குறியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாகத்தான் நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு சமந்தாதான் ஜோடி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும், ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பும், ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளி நாட்டில் நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது