நகைச்சுவை நடிகை வீட்டில் போதைப் பொருள் பறிமுதல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Narcotics Control Bureau Conducts Raid at Comedian Bharti Singh's Flat in  Mumbai

பாலிவுட்டின் நகைச்சுவை நடிகையான பாரதி சிங்கின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பாலிவுட்டில் அதிகமாக புழங்கும் போதைப் பொருள் பழக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுஷாந்த் வழக்கில் கூட அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ரியா சுஷாந்திற்கு போதை பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட விசாரணையில் மேலும் பல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று மும்பை லோக்கண்ட்வாலா பகுதியில் உள்ள காமெடி நடிகை பாரதி சிங்கின் வீடு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தியிருக்கின்றனர். அங்கிருந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் நேற்று பாரதி சிங்கும் இன்று அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.