நகரசபை ஊழியர்களிற்கிடையில் முரண்பாடு!!மூன்றுபேர் கைது

வவுனியா நகரசபையில் பணியாற்றும் சில ஊழியர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக வவுனியா பொலிசாரால் மூவர் கைதுசெய்யப்பட்டு நீதி மன்றில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரசபையில் இரு தொழிற்சங்கங்கள் செயற்பட்டுவரும் நிலையில் இருதரப்பையும் சேர்ந்த சில ஊழியர்களிற்கிடையில் இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நகரசபை ஊழியர்கள் மூன்று பேர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.