தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான செயலமர்வு

வடகிழக்கு பகுதிகளில் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு முழு நேரமாகவும் ,பகுதி நேரமாகவும் தமக்கு சார்பான நேரத்தில் தொழில்வாய்ப்புக்களை ஏற்றவிதத்தில் பெற்றுக்கொள்வதற்கான செயலமர்வு ஒன்று நாளை 16 புதன்கிழமை காலை 8.30 மணிமுதல் பிற்பகல் மேணிவரையும் கிளிநொச்சி பாரதி நட்சத்திர விருந்தினர் விடுதியில் இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் க.இராஜேந்திரம் தெரிவித்துள்ளார்
வேல்ட் வின் பிளாண்டேசன் தனியார் நிறுவனத்தின் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக இச் செயலமர்வில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் யுவதிகள் தமது பெயர் விபரங்களை 071 2221774 என்ற இலக்கத்திற்கு வட்செப் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதால் தமக்கான ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று மேலும் தெரிவித்துள்ளார் .