தொல்பொருள் என்ற கோணத்தில் பல காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றது.

தொல்பொருள் என்ற கோணத்தில் பல காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றது.                                   

-சி .கயேந்திரன்-

வன்னியில் தொல்பொருள் உள்ளஇடம் என்றபோர்வையில் மக்களின் காணிகள் அபகரிக்கபட்டிருக்கின்றது. தமது பூர்விக காணிகளில் தமிழ் மக்கள் குடியேறமுடியாத நிலை காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் வன்னி மாவட்ட வேட்பாளரான
சிவபாதம் கயேந்திரன் தெரிவித்தார். 

வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் இன்றயதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
எமது கட்சியானது2010 ஆம் ஆண்டில்இருந்து கொள்கைவிலகாமல், விலைபோகாத தலைமையுடன் பயணித்துவருகின்றது. தமிழ்த்தேசிய அரசியலைப்பாதுகாப்பதற்கும் நிலஉரிமைகளை பாதுகாப்பதற்கும் வன்னிமாவட்டமக்கள் தமிழ்தேசியமக்கள் முண்ணணிக்கு வாக்களிக்க வேண்டியதேவை எழுந்துள்ளது.


கடந்தகாலங்களில் தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அந்தகொள்கைகளில் இருந்துவிலகிஅரசினை ஆதரித்திருந்தார்களே தவிர மக்களிற்கு எதனையும்செய்யவில்லை. அவர்கள் தீர்வுவரும் என்று மக்களை ஏமாற்றி அரசியல் நாடகத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
எனவே கடந்தகாலங்களில் ஏமாற்று அரசியலை செய்தவர்களை விலக்கிவிட்டு தமிழ்தேசியமக்கள் முண்ணணியியை மக்கள் ஆதரிக்கவேண்டும். மாற்றம் என்பது அரசியல் பதவிகளிற்கான மாற்றமாக இருக்ககூடாது. கடந்த காலங்களில் பலகட்சிகளில் போட்டியிட்டவர்கள் இன்று கட்சிமாறி வேறுகட்சிகளில் போட்டியிடுகின்றனர். நாங்கள்தான் மாற்றுத்தலைமை என்று கூறுகின்றார்கள்.
அவர்கள் அனைவரும் ஓய்வூதியம் பெற்ற பின்னர் தான் போட்டியிடுகின்றனர். ஆனால் எமது கட்சியானது ஊழலற்ற நேர்மையான, சமூகஆர்வலர்களையும், இளைஞர்களையும் களத்திலே இறக்கியுள்ளது.
இன்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் எமக்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். அது போல பல புத்திஜீவிகள் தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் வெற்றிக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். 

வவுனியாமாவட்டமானது பல தொல்பொருள் சான்றுகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அந்தவகையில் தொல்பொருள் உள்ள இடம் என்ற போர்வையில் மக்களின் பல காணிகள் அபகரிக்கபட்டிருக்கின்றது. தமது பூர்விக காணிகளில் தமிழ் மக்கள் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. இன்றும் மலசலகூடம் இல்லாத வீடுகள் வடக்கிலே இருக்கின்றது, பல வீடுகள் கட்டிமுடிக்கப்படாத நிலையிலே இருக்கின்றது. எனவே போரிலே கடுமையாக பாதிக்கப்பட்ட வடகிழக்குமாகாணம் முற்றுமுழுதாக புணரமைக்கப்படவேண்டும்.
எனவே தமிழ்தேசியமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்த்தேசியமக்கள் முண்ணணியை வெற்றிபெறச்செய்யவேண்டும்  என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.