தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், இதுவரை சுமார் 35,000 இற்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது.இந்நிலையில், கொரோனா வைரஸ்  தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், இதுவரை சுமார் 35,000 இற்கு  மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.மேலும், கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று வரையில் சுமார் 185,000பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.