தொடர் கனமழை காரணமாக பயிர்கள் சேதம் – வேதனையில் விவசாயிகள்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலயபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு வாழை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலூர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால்  சருகுவலையபட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, பப்பாளி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதே போல அந்த பகுதியில் உள்ள மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன.

மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.