தொங்கலில் விட்ட படத்தை முடித்துக் கொடுக்கும் சிம்பு- மீண்டும் தூசு தட்டப்படும் முஃப்தி!

STR back in Maanaadu? | Tamil Movie News - Times of India

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான முஃப்தி திரைப்படம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

இளையதலைமுறை நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் சிம்புவை போல் ஒரு நடிகர் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் கொடுப்பதில் தவறி வருகிறார். சிம்பு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார் என்றால் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் சரியாக செல்ல மாட்டார் என்று பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த தவறை சிம்பு இப்போதும் திருத்திக் கொள்வதாக தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் முஃப்தி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிம்பு, சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வராததால் இந்த படமே டிராப் செய்யப்பட்டு விட்டதாக ஞானவேல்ராஜா அறிவித்தார். ஆனால் இப்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க உள்ளாராம் ஞானவேல் ராஜா. ஆனால் முன்பு படத்தை இயக்கிய நரதன் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

அவருக்கு பதிலாக ஜில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா மீதிப் படத்தை இயக்க உள்ளாராம்.