தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 22ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, தே.மு.தி.க தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அது உடனடியாக சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தது.