தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக இதுவரை 6015 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆயிரத்து 84 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு நிலையத்தில் 4931 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் வன்முறை சம்பவங்கள் எவையும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
