தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார். 

இந்த நிலையில், தற்போது மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.