தேனோடு இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடும்போது கிடைக்கும் பலன்கள் !!

6 surprising health benefits of honey | BT

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய்  இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும். 

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெய்யோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும். 

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்கு தொப்புளை சுற்றிலும் தேன் தடவினால்  வலி நீங்கும். 

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும், கல்லீரல் வலுவடையும். 

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும், நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும். 

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும். முருங்கைக்காய்ச் சாறுடன் சமஅளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.