தேசிய விளையாட்டு சபை தலைவர் நியமிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 13 பேர் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tiktamil.com

இக் குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹட்டி, ரொவேனா சமரசிங்க, யஸ்வந்த் முத்தெட்டுவேகம, A.J.S.S எதிரிசூரிய மற்றும் தியுமி அபேசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.