தெலுங்கு திரையுலகில் நஸ்ரியா: ஹீரோ இவர்தான்!

Nazriya Nazim Plays A Very Important Role In Ajith's 'Valimai' | Varnam MY

தமிழ் திரைஉலகில் நேரம், நய்யாண்டி, வாயை மூடி பேசவும், ராஜா ராணி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகை நஸ்ரியா கடந்த 2014 ஆம் ஆண்டு பகத் பாசில் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு படத்திலும் இந்த ஆண்டு இரண்டு மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நானி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விவேக் அதெரியா என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் தான் நஸ்ரியாவின் முதல் தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு நவம்பர் 21 ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் மலையாளத் திரையுலகில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த நஸ்ரியா முதல் முறையாக தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைப்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.