தெலுங்கான வெள்ள பாதிப்பு நிதியாக சூப்பர் ஸ்டார் ரூ.1 கோடி அறிவிப்பு

This big hit of Mahesh Babu to be remade in Hindi

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அங்கு பல இடங்களில் வெள்ளக்காடாக நீர் சூழ்ந்துள்ளது.

இந்த வெள்ளநீரால் பலபேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த மழையில் சில இடங்களில் வீடுகள் இடித்து விழுந்தன. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.

எனவே வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக மக்களின் சார்பில் ரூ.10 கோடி நிதி உதவி அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடி அறிவித்துள்ளார். மேலும் இதற்கு உதவும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.