தெற்கு ஒன்ராறியோ பிராந்தியங்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை

தெற்கு ஒன்ராறியோவை நோக்கி வெள்ளிக்கிழமை மாலை சில பகுதிகளில்  இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஒரு சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் சில பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது  

கடுமையான வானிலை தெற்கு ஒன்ராறியோவை நோக்கி நகர்வதால் வெள்ளிக்கிழமை மாலை சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் , மேலும் Barrie, Orillia, Collingwood, Hillsdale, Midland  மற்றும் Coldwater சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு சூறாவளி ஏற்பட்டால், குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் மிகக் குறைந்த தளத்திற்குச் செல்லவும், ஒரு அடித்தளத்தில் அல்லது குளியலறையில் தஞ்சமடையவும், சுவர்கள் மற்றும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்கவும் சுற்றுச்சூழல் கனடா நிறுவனம் அறிவுறுத்தியிருக்கின்றது