தென்மேற்கு பருவமழை ; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் |rainfall chances in  tamilnadu Meteorological Department reports– News18 Tamil

கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவகாற்றால் வட மாநிலங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளிலும் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் 20ம் தேதி வரை 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.