தென்காசியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பேருந்து பயணிகளிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, வாசுதேவ நல்லுர் காவல்துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்கள் இருவரும் சிவகாசியை சேர்ந்த பொன்னுத்தாய் மற்றும் மாலதி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 120 கிராம் எடையுள்ள இரண்டு தங்க செயின்கள் மற்றும் 12 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.