துஷாரவுக்கு எதிரான பிடியாணையை நாளை வரை அமுல்படுத்த தடை

குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஐவரை கைது செய்யுமாறு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 7ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணை அமுல்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை நாளை (25) வரை நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிடியாணையை அமுல்படுத்தப்படுவதா? இல்லையா என்பது தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வௌியாகவுள்ளது.

அதுவரை பிடியாணையை அமுல்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் பெறுமதி வாய்ந்த கட்டடம் தர்க்கப்பட்டமை தொடர்பில் குருநாகல் மாநகர மேயர் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

குருநாகலில் புராதன பெறுமதி வாய்ந்த கட்டடத்தை டோசர் இட்டு தகர்த்தமை தொடர்பில் மாநகர மேயர் துஷார சஞ்சீவ வித்தாரன உள்ளிட்ட 05 சந்தேக நபர்களுக்கு எதிராக கடந்த 7 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்று வரை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.