துப்பாக்கி நபரின் நடமாட்டம், டொரோண்டோ பாடசாலைகளில் பதட்டம்

டொரோண்டோ மேற்கு பகுதியில் உள்ள பாடசாலைகள் நேற்று திங்கள் கிழமை  நபர் ஒருவர் இரண்டு துப்பாக்கிகளுடன் நடமாடுவதக கிடைத்த தகவலை அடுத்து பாடசாலையை விட்டு எவருமே வெளியாகாத வண்ணம் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் 

நபர் ஒருவர் இரண்டு துப்பாக்கிகளுடன் அந்த பகுதியில் காணப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து   Eglinton Avenue மேற்கு பகுதியில் உள்ள குறைந்தது 7 பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் தமது பாடசாலை நேரத்தை மூடிய பாடசாலைக்குள் கழித்ததாக தெரிய வருகிறது

AppleMark

சந்தேக நபர் இராணுவ வீரனை போல் ஆடை அணிந்திருத்தத்துடன் இராணுவ தொப்பியும் அணிந்திருந்தார்

நேற்றைய தினம் பிற்பகல் மூன்று மணிவரை சந்தேக நபர் கைது செய்யபடவில்லை பொலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்