துணிவிருந்தால் இனி கள்ளவாக்கென சொல்லிப் பாருங்கள் – எச்சரிக்கும் சுமந்திரன்

நான் கள்ள வாக்கினால்தான் வென்றேன் என நாளை முதல் யாராவது சொன்னால் கடும் நடவடிக்கையெடுப்பேன். யாராவது துணிவிருந்தால் ஊடகங்கள் முன் அதை சொல்லட்டும். அதன் பின்னர் என்ன நடக்கிறதென பார்ப்போம் என எச்சரித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் கள்ளவாக்கால்தான் வென்றேன் என சொன்னவர்கள் மீது நடவடிக்கையெடுக்கவுள்ளேன். நாளை முதல் யாராவது துணிவிருந்தால் இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக சொல்லட்டும். அவர்கள் அதற்குரிய விளைவை சந்திப்பார்கள்.


நான் கள்ளவாக்கினால் வென்றேன் என்பவர்கள் தாராளமாக வழக்கு தாக்கல் செய்யலாம். நான் அரச உத்தியோகத்தர்களின் நேர்மையை சந்தேகிக்கவில்லை. யாரும் வழக்கு தாக்கல் செய்தால், நான் எனது வாக்கை மீள எண்ண சம்மதம் தர தயாராக இருக்கிறேன். எனது வெற்றி நேர்மையானது. அதனால் மீள வாக்கு எண்ணுவதில் எனக்கு பிரச்சனையில்லை.

இனியும் யாருக்காவது துணிவிருந்தால் ஒரு ஊடகத்தின் முன் வந்து நான் கள்ள வாக்கினால் வென்றேன் என சொல்லட்டும். அதன் பின்னர் நடப்பதை பார்ப்போம் என்றார்.