தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும், அரசுகளும், மதங்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது – பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள அவரது பிரம்மாண்ட சிகைக்கு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஒற்றுமை உறுதிமொழியை செய்து வைத்த அவர், பாதுகாப்புப் படை வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பையும் பார்வையிட்டார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்திய நிலத்தை குறி வைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைத்து வருவதாகக் கூறினார்.

இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை முழுவதும் பாதுகாக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தீவிரவாதத்தை சிலர் ஆதரித்து வருவதாக விமர்சித்த பிரதமர், தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், அவரது பேச்சின்போது, “மன்னும் இமய மலை எங்கள் மலையே” என்ற, பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.