தீயில் எரிந்து குடும்ப பெண் சாவு

வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீயில் எரிந்து ஒரு பிள்ளையின் தாய் சாவடைந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை  தனது வீட்டில் இருந்த போது தவறுதலாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் சாவடைந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜயா வயது 24 என்ற ஒரு பிள்ளையின் தாயாரே சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது மரணம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்