தீபாவளி கொண்டாட்டத்திற்கு பக்கவா ரெடியான நடிகை சமந்தா!

நடிகை சமந்தாவின் தீபாவளி கொண்டாட்டம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வருகிறார். நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, கார்டன் வைப்பது என தனக்கு பிடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சமந்தா சுடிதார் அணிந்து தீபாவளிக்கு பக்காவாக ரெடியாகி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்த ரசிகர்கள் அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.