தீபாவளிக்கு புத்தம் புதிய படங்கள் ரிலீஸ்!– எந்தெந்த படங்கள்?

Theatre

விபிஎஃப் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளிக்கு நான்கு புதிய படங்கள் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் விபிஎஃப் கட்டண விவகாரத்தால் புதிய படங்கள் வெளியாகாத சூழலில் முன்னதாக வெளியான படங்களை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இந்நிலையில் 2 வாரத்திற்கு விபிஎஃப் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக க்யூப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து நான்கு புதிய படங்களை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

Diwali Release

அதன்படி அருள்நிதி, ஜீவா இணைந்து நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்”, சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “எம்ஜிஆர் மகன்”, சந்தோஷ் பி ஜெயக்குமார் நடித்து இயக்கியுள்ள “இரண்டாம் குத்து”, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “பிஸ்கோத்து” ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.