திரையரங்குகளை திறக்க அனுமதிக்கக்கோரி முதல்வரை நேரில் சந்தித்து திரையரங்க உரிமையாளர்கள் மனு!

திரையரங்கு உரிமையாளர்கள்  தமிழகத்தில் அரசின் வழிகாட்டுதல்படி திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக திரையரங்கு உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால் தானியங்கி முறையில் புதுப்பித்து ஆணை வழங்க ஆவண செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். தினசரி 4 காட்சிகள் என்ற முறையை மாற்றி காலை 8 மணி முதல் இரவு 2 மணி வரை எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் திரையிட அனுமதி வழங்குமாறும் அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.