திரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலம் தமிழ்நாடுதான்… அமைச்சர் உறுதி!

சீனாவில் திரையரங்குகள் திறப்பு - பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி, China's  cinemas reopen on July 20 after six months of closure– News18 Tamil

மத்திய அரசு உத்தரவு அளித்ததும் திரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டு, நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது ஆனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கும் மட்டும் திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையரங்குகளை திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்க மறுத்துவிட்டன. இந்நிலையில் இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ‘மத்திய அரசு அறிக்கை வெளியிட்டதும், திரையரங்குகளைத் திறக்கும் முதல் மாநிலமாகத் தமிழகம் இருக்கும்’ என உறுதியளித்துள்ளார்.