திருமணத்துக்குப் பின் நடிப்பாரா காஜல் அகர்வால்?

Kajal Aggarwal and Gautam Kitchlu are enjoying their 'pre-wedding  festivities', see pictures | Entertainment News,The Indian Express

நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில் அதன் பின்னர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பை தொழிலதிபர் கௌதம் அவர்களுக்கு வரும் 30ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் அவரது மும்பை வீட்டில் மிகவும் எளிமையாக குறைந்த விருந்தினர்களுடன் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது ரசிகர்களுக்கு தசரா வாழ்த்துக்கள் கூறிய இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆனவுடன் காஜல் தொடர்ந்து நடிப்பாரா அல்லது பல நடிகைகள் போல நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லறத்தில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாக காஜல் அகர்வால் தொடர்ந்து நடிப்பேன் என சொல்லியுள்ளாராம்.