திருப்பரங்குன்றம் முருகன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவிப்பு!

மதுரை அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி மற்றும் கார்த்திகை திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கார்த்திகை திருவிழாக்கள் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் கோயிலுக்கு உள்ளேயே உள் திருவிழாவுக்காக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கார்த்திகை மாதத்தில் சுவாமிக்கு காப்பு கட்டுதல், வேல் வாங்குதல், சூரசம்ஹாரம், மலை மீது மகா தீபம் ஏற்றுதல் ஆகிய திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே காப்பு கட்டி விரதம் இருக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் வேண்டுகோள். 

நவம்பர் 15 சுவாமிக்கு காப்பு காட்டுதல், நவம்பர் 19 வேல் வாங்குதல், நவம்பர் 20 சூரசம்ஹாரம், நவம்பர் 28 பட்டாபிசேஷகம், நவம்பர் 29 மலை தீபம் ஏற்றுதல், நவம்பர் 30 தீர்த்தம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.