திருட்டுச்சம்பங்களுடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது!!பொருட்களும் மீட்பு!!

வவுனியாவில் பல்வேறு திருட்டுச்சம்பங்களுடன் தொடர்புடைய இருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடுகள்,மற்றும் மோட்டர்களை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.


அந்தவகையில் சமயபுரம் பகுதியில் நெல் அரைக்கும் ஆலை ஒன்றில் 75 ஆயிரம்ரூபாய் பெறுமதியான நான்கு மோட்டர்களை திருடிய குற்றச்சாட்டு மற்றும் காத்தார்சின்னக்குளம்,ஆச்சிபுரம் பகுதிகளில் ஆடுகளை திருடிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டர்களும், மூன்று ஆடுகளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த கைது நடவடிக்கை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பீ,ஆர்.மானவடுவின் வழிகாட்டலில், உபபொலிஸ் பரிசோதகர், ஆர்.திசாநாயக்க தலைமையில், சாயன்களான தீலீப,திசாநாயக்க,கான்ஸ்டபிள்களான உபாலி,பிரியங்கர ஆகியோரை கொண்ட பொலிஸ் குழிவினரால் மேற்கொள்ளப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர்கள் நாளையதினம் நீதி மன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.