திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன  இதனைத் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த வைத்தியர், விடுமுறைக்காக  சென்று கடந்த 27ஆம் திகதி வைத்தியசாலைக்கு வருகை தந்தார்.அதனைத் தொடர்ந்து, அவருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்பொது கிடைக்கப்பெற்றுள்ளன. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 30வயதுடையவர். இவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் 5ம், 6ஆம் வாட்டில் கடமையாற்றியும் உள்ளார்.இந்நிலையில், குறித்த வைத்தியரை IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.