திமுக கூட்டணியை சிதறடிப்பதற்காகவே என் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டு! – திருமாவளவன்

மனு தர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் திருமா வளவன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இணையதள மாநாட்டில் பேசிய என்னுடைய பேச்சின் ஒரு சிறு பகுதியை துண்டித்து, அவதூறு பரப்புரையை சிலர் பரப்பி வருவதாக தெரிவித்தார். மோடி அரசுக்கு சேவை செய்வதற்காகவே, அதிமுக அரசு தன்மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், மனுதர்ம நூலை யார் எந்தளவிற்கு படித்துள்ளார்கள் என பொது வெளியில் விவாதத்திக்க, குஷ்பு தயாரா எனவும் திருமாவளவன் சவால் விடுத்தார். எஸ்.வி சேகரைப்  போன்று பாஜகவினர் பலர் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசி இப்பதாகவும், ஆனால் அவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் திருமாவளவன் சுட்டிக் காட்டினார்.