தாய்வானுடனான எந்தவொரு உத்தியோகபூர்வ பரிமாற்றங்களையும் தொடர்புகளையும் மேற்கொள்ள வேண்டாம் -சீனா

அமெரிக்கா-தாய்வான் இடையே இம்மாதத்தில் பொருளாதார பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் சென் செர்ன்சி தலைமையிலான ஒரு சிறிய தூதுக்குழுவை தைவான் அமெரிக்காவுகு அனுப்பவுள்ளது.

நவம்பர் 20ஆம் திகதி அமெரிக்க-தாய்வான் பொருளாதார செழிப்பு கூட்டாண்மை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இந்நிலையில் தாய்வானுடனான உறவை அதிகரிப்பதை நிறுத்துமாறு சீனா அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.

மற்ற நாடுகளுடன் உத்தியோகபூர்வ உறவுகளை உருவாக்குவதற்கான உரிமை இல்லாத சுயாட்சி தீவான தாய்வானை சீனா தனது சொந்த பிரதேசமாகக் கருதுகிறது.இந்நிலையில், தாய்வானுடனான எந்தவொரு உத்தியோகபூர்வ பரிமாற்றங்களையும் தொடர்புகளையும் மேற்கொள்ள வேண்டாம் என சீனா தெரிவித்துள்ளது.