தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தின் தென்மேற்குப் பகுதியால் சீனப் போர் விமானங்கள் !- எச்சரித்த தாய்வான்

தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தின் தென்மேற்குப் பகுதியால், சீனப் போர் விமானங்கள் பறந்த நிலையில் தாய்வான் விமானப்படை தனது ஏவுகணை அமைப்பை செயற்படுத்தி எச்சரித்துள்ளது.தாய்வானில் புதிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உளவுத்துறைத் தலைவர் அறிவிக்கப்பட்ட நிலையில், சீனப் போர் விமானங்களில் அத்துமீறல்களைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள், நான்கு சீன ஜே-16 விமானங்களும், நான்கு ஜே.எச்-7 விமானங்களும் ஒரு மின்னணு போர் விமானமும் நுழைந்ததாக  தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.