தாய்லாந்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலையை நீடிக்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு

தாய்லாந்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலையை நீடிக்க அந்நாட்டு அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புக் கொண்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் கொரோனா தொற்றினால் 3,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 59 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.