தாண்டிக்குளம் உட்பட வவுனியாவின் பல குளங்களில் மீன்குஞ்சுகள் விட்ட எம்.பி!

இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் குளங்களில் மீன் குஞ்சுகள் மற்றும் இறால் குஞ்சுகளை விடுவதற்காக 13 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக வவுனியா தாண்டிக்குளம் குளத்தில் இன்று 15000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், பிரதேச செயலாளர் ந. கமலதாசன், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா பொறுப்பதிகாரி யோ.நிசாந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.