தள்ளிபோகிறது ‘வாடிவாசல்’ , முந்துகிறது பாண்டிராஜ் படம்: பரபரப்பு தகவல்

துரைசிங்கம் 🏇 on Twitter: "Fan made 😎💥 @Suriya_offl @VetriMaaran  #VaadiVasal #வாடிவாசல் #SooraraiPottru… "

சூர்யாவின் 38ஆவது திரைப்படமான ’சூரரை போற்று’ அக்டோபர் 30ம் திகதி ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவரது 39 வது படமாக கமிட்டான ’அருவா’ திரைப்படம் டிராப் ஆகிவிட்டதால் அதற்கு பதிலாக மாற்று படம் என்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை இருப்பினும் இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பது உறுதி என்றும் இந்த படத்தின் இயக்குனர் மட்டும் மாறுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யாவின் 40வது படம் என வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ என உறுதி செய்யப்பட்டதும் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சூர்யாவின் 41 வது படமாக கூட்டத்தில் ஒருவன் இயக்குனரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் 42வது படம்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக 42வது படம் என்று குறித்து வைக்கப்பட்டிருந்த சன் பிக்சர்ஸ்-பாண்டிராஜ் படம் திடீரென 40வது படமாக மாறுகிறது. அதேபோல் ’வாடிவாசல்’ திரைப்படம் 42வது படமாக தள்ளிப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’சூர்யா 40’ படத்தை ஆரம்பிக்கும் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் பாண்டிராஜூம் சுறுசுறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த மாதம் சூர்யாவின் அடுத்த பட படப்பிடிப்பு நடக்க உள்ளது சன் பிக்சர்ஸ்-பாண்டிராஜ் படம் தான் என்று கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது