தலைவி படத்திற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கணா ரணாவத் !

பெப்சி மற்றும் தலைவி பட குழுவினருக்கு உதவிய கங்கனா ரணாவத் || Kangana Ranaut  help to fefsi and thalaivi team

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக தலைவி படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடிக்கிறார்.

இப்படத்தில் முக்கிய நட்சத்திரங்களாக அரவிந்த் சாமி, மதுபாலா உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

கொரொனா காலகட்ட ஊரடங்கினால் ஷூட்டிங் தடைபட்ட நிலையில் மீதமுள்ள கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப்படவுள்ளது.

தற்போது இப்படத்தி தன் உடல் எடை அதிகரித்தது குறித்து  கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் தலைவி படத்திற்காக 20 கிலோ வரை அதிகரித்தேன். தற்போது படம் முடியும் தருவாயில் உள்ளதால்  மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறேன். இதற்காக அதிகலையில் எழுந்து ஓடுகிறேன் யாரெல்லாம் என்னுடன் வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

I had gained 20kgs for Thalaivi, now that we are very close to completing it, need to go back to my earlier size, agility, metabolism and flexibility. Waking up early and going for a jog/walk …. who all are with me ?