தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது

காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி. பிலிகுண்டு லு.தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று நீர்வரத்து 8000 ஆயிரம் கன அடியாக இருந்தது இன்று 11 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பரிசல் இயக்க கடந்த ஓராண்டாக தடை நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.