தயாரிப்பாளர் ஆகிறார் நமீதா: அதிகாரபூர்வ அறிவிப்பு

Movie Magazine on Twitter: "The Ever Gorgeous #Namitha 🖤🔥 latest  photoshoot pics..… "

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான நமீதா தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. நமீதா தயாரிக்கும் முதல் திரைப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 26-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து நமீதாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நமீதா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் மேலும் சில பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகை வரலட்சுமி இயக்குனராக மாறியுள்ள நிலையில் தற்போது நடிகை நமீதா தயாரிப்பாளராக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.