தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மாபெரும் பிரச்சார கூட்டம் ஆரம்பம்!!விஞ்ஞாபனமும் வெளியீடு!!

தமிழ்மக்கள் தேசியகூட்டணியின் மாபெரும் பிரச்சாரக்கூட்டம் வவுனியாநகரசபை காலாசார மண்டபத்தில் இன்றுகாலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் கே.அருந்தவராயா தலைமையில் இடம்பெற்றுவரும் இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கூட்டணியின் தலைவர் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டார்.
முன்னதாக வவுனியா நகரசபை வாயிலில் இருந்து மங்களவாத்தியம் முழங்க விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
நிகழ்வில் விசேடஅம்சமாக கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. முன்னாள் நீதி அரசரும், கூட்டணியின் தலைவருமான க.வி. விக்கனேஸ்வரன் அதனை வெளியிட்டுவைக்க உபதலைவரான சுரேஸ்பிரேமசந்திரன் அதனை பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான க. சுரேஸ்பிரேமசந்திரன், சிவசக்திஆனந்தன், தமிழ்மக்கள்
சுயாட்சிக்கழகத்தின் தலைவி அனந்திசசிதரன், முன்னாள் மாகாண அமைச்சர் ஞா.குணசீலன் மற்றும் வன்னிமாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்,பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.