தமிழ் பண்பாட்டின் மகத்துவம் ஒளிரட்டும்: பிரதமர் மோடி

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என பிரதமர் மோடி தன்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 14ம் தேதி இன்று சித்திரையின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். அனைவரின் வாழ்விலும், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியை புத்தாண்டு கொண்டு வர, பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.