தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்

பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றது.இதன்போது மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துதல்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என தெரிவித்தார்.