தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது தாக்குதல்.

கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் இன்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

அவர் உரையாற்றிக்கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்றிருந்ததாகவும், பளையில் நடைபெறுகின்ற பரப்புரைக் கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் அவர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் சிறீதரன் தரப்பு தெரிவிக்கின்றது.

சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற வேட்பாளர் ஒருவருக்கு நெருக்கமானவர்களே தாக்குதல் நடத்தியிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.