தமிழரசு கட்சியின் புதிய இளைஞரணி தெரிவு!!

வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞரணி தெரிவு கட்சி அலுவலகமான தாயகத்தில் நேற்று 12.9 இடம்பெற்றது.
அதன்படி  இளைஞரணியின் புதிய தலைவராக சி.சிவதர்சனும், செயலாளராக அ.அன்ரணி றெக்சனும்,பொருளாலராக ச.பத்மசீலனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
 உபதலைவராக சி.வினோத்,உபசெயலாளராக கு.ரஞ்சித்,பிரதித்தலைவர்களாக, நவநீதன்,இந்திரன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இளைஞரணியின் அமைப்பாளராக சயீவனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனைவிட பிரதேச அமைப்பாளர்கள் நான்குபேரும் நிர்வாக சபை உறுப்பினர்கள் 10 பேரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.