தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் கூடியது

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், சுமந்திரன், சிறிதரன் உட்பட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு கூட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.